Description
கந்தர் அலங்காரம், தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம். அதற்கு இதுவரை பலர் உரை செய்துள்ளனர். இந்த நூலில், ஆசிரியர் எளிய உரைநடை மூலம், ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி இருக்கிறார். பாடல், அதற்கான திரண்ட பொழிப்புரையாக, இரண்டு அல்லது மூன்று வரிகளில் விளக்கம், அதன் பின், பாடலின் உட்கருத்து, அதற்கேற்ப மகான்கள் பலரின் வாழ்வில் நடந்த அருள் நிகழ்ச்சிகள், பாடலின் கருத்தை சுட்டிக்காட்டும், பிற மகான்கள் பாடிய பாடல்களின் மேற்கோள் என, கோர்வையாக அடுக்கியுள்ளார்.
கந்தர் அலங்காரத்தில், திருச்செங்கோடு தலத்தை ஆறு இடங்களில் குறிப்பிடும், அருணகிரிநாதர், தனது சேத்திரக்கோவை திருப்புகழில் அதை குறிப்பிடாதது ஏன் என, தெரியவில்லை என, சுட்டியுள்ளார் ஆசிரியர். வாசிக்க, பாராயணம் செய்ய எளிமையான நூல்.