Description
குடிமகன் என்றால் தென் தமிழகத்தில் முடித்திருத்து சமூகத்தினரைக் குறிக்கும் சொல். இந்த நாவல், சாதிய கட்டமைப்பின் கொடூரத்தையும், வாழ்க்கை முறையையும், கிராமத்து வாழ்வையும் கண்முன் நிறுத்துகிறது.
– பேராசிரியர் முனைவர் சுதாகர்.
கிராமத்தில் ஏற்பட்ட இறப்பினைச் சுற்றி நடைபெறும் சடங்கு முறைகளையும், அதை சார்ந்த சாதிய அவலங்களையும் நேர்த்தியாக நூலாசிரியர் கையாண்டுள்ளார்.
– நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர், சிவசத்தியவள்ளி.
சுடலை ஒவ்வொரு கிராமத்திலும் வசித்துக் கொண்டிருக்கும் அற்புத மனிதன். இவன் இல்லையென்றால் கிராமத்தில் எந்தவொரு சடங்கும் இல்லை. இவனை இந்த சமூகம் மதிப்பதில்லை. இந்த நாவல் சரித்திரமாய் வாழ்ந்த குடிமகன்களை நினைவுப்படுத்துகிறது. நிச்சயம் இந்த நாவல் வரலாற்றில் இடம் பிடிக்கும். வாழ்த்துகள் சிஷ்யா! வளர்க வளமுடன்.
– எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.