மூணாறிலிருந்து மெரினா வரை


Author: டிஜிபி வால்டர் ஐ.தேவாரம்

Pages: 493

Year: 2024

Price:
Sale priceRs. 500.00

Description

மூணாறிலிருந்து மெரினா வரை என்ற இப்புத்தகத்தில் வால்டர் ஐ. தேவாரம் அவர்களின் வாழ்க்கைப் பயணம் மூணார் தேயிலைத் தோட்டத்தில் தொடங்கிய சிறுவயது நினைவுகளையும், கல்லுரிப் படிப்பை சென்னையில் தொடர்ந்தது பற்றியும் இராணுவத்தில் சேர ஆர்வம் கொண்டு, வடகிழக்கு மாநிலத்திற்குச் சென்று இம்பால் நகரில் சிறிதுகாலம் கல்லுரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விட்டுப் பின்னர் அவரது இரண்டாவது தெரிவான இந்தியக் காவல் பணியில் சேர்ந்தது பற்றியும் அதன் பின்னர் கடந்த கால சம்பவங்களைப் பற்றியும் சுவராசியமாக எழுதியுள்ளார் அதை வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம்.

அவருடன் சேருங்கள் தமிழ்நாட்டுக் காவல் பணியில் பல ஆண்டுகள் வன்முறைக்கும்பல்களை அடக்கியதும், நக்சல் தீவிரவாதிகளை ஒழித்தது, வீரப்பன் வேட்டையில் ஈடுப்பட்டது போன்றவற்றை அவருடன் இராட்டினத்தில் பயணித்து அனுபவியுங்கள்.

ஓய்வுபெற்று இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்து தன்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் எவ்வாறு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் பணிபுரிந்து தனது தனித்தன்மையை பதிவு செய்துள்ளார் இப்புத்தக்கத்தின் வழியாக.

You may also like

Recently viewed