Description
சூரியன், சந்திரன், பூமி எல்லாமே சக்கரம்தான்! எல்லாமே எந்திரங்கள்! மனிதர்களும் எந்திரங்கள்! ஒரு சின்ன சக்கரத்திற்குப் பற்கள் இருந்தால் எவ்வளவு பெரிய சக்கரங்களையும் சுழல வைத்து விடும். பெரும் முதலாளிகள் சின்னச் சின்ன பற்சக்கரங்கள்தான். அது எவ்வளவு பெரிய சமுதாயத்தை சுழற்றிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு உழைப்பைப் பிழிந்து கொண்டிருக்கிறது… ஒரு சில மனிதர்களின் சுய லாபத்திற்காக பல்லாயிரம் மனிதர்கள் எந்திரங்களாகிச் சுழல்கிறார்கள். அதில் ஒரு துளி இந்தக் கதை.