Description
ஐயாயிரத்துக்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ள, கலைஞன் பதிப்பக ஸ்தாபகர் திரு. க. மாசிலாமணி அவர்களின் மைந்தன். நந்தன். அன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலரது எழுத்துகளை நூலாக்கி ஆற்றுப்படுத்தியவர். இவரது தந்தை மாசிலாமணி. எந்த நூல்களை வெளியிட வேண்டும் என்பதைவிட எவற்றை வெளியிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று மகனுக்குக் கற்றுத்தந்தவர். தந்தையின் வழிகாட்டுதலின்படி நாற்பது ஆண்டுகளாக பதிப்பகப்பணி செய்துகொண்டிருக்கும் நந்தன், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள். தூரக் கிழக்கு நாடுகள் எனப் பலநாடுகளில் முப்பது கருத்தரங்குகளை நடத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்டு பேராசியர்களை கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்தவர். கலைஞன் பதிப்பக அறுபதாவது வைரவிழா ஆண்டில் நூற்றிருபது எழுத்தாளர்கள், பேராசிரியர்களை அழைத்து சென்று, பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்நின்று நடத்தியவர். பொருளாதார ஆலோசகருமான இவர், சில கட்சிகளுக்குப் பொருளாதார ஆலோசனைகளை வழங்கியிருப்பதோடு மத்திய மாநில நிதி நிலை அறிக்கை பற்றி தமிழ் சேனல்களில் விரிவாகப் பேசியும் உள்ளார். உலகநாடுகளை உற்றுப் பார்த்து, ஒவ்வொரு நாடும் தன் நாட்டு மக்கள் நலன் சார்ந்து செய்யும் உளவுப்பணியைக் கூர்ந்து நோக்கியதன் விளைவாக குமுதம் ரிப்போர்ட்டரில் இவர் எழுதிய தொடரின் தொகுப்பே இந்த நூல்.