Description
இவர்கள் என்னுடைய நாயகர்கள். தங்கள் சிந்தனைகள், சொற்கள், நடவடிக்கைகள், வாழ்க்கையின் மூலம் எனக்கு சிறிய, பெரிய, மிகப் பெரிய பாடங்களைக் கற்பித்தவர்கள், உலகில் குறிப்பிடக்கூடிய மாற்றங்களை உண்டாக்கியவர் களும்தான். அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு சொற்களில் அறிமுகப்படுத்த முயன்றுள்ளேன். இந்த 102 பேரும் உங்கள் நாயகர்களாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால், உங்களுடைய 102 நாயகர்களைப்பற்றிச் சிந்திக்கும் எண்ணத்தை இந்தப் புத்தகம் உங்களுக்குள் தூண்டும். அதற்குக் காரணம் நான் இல்லை, என் நாயகர்கள்தான்!