Description
க.நா.சு-வை இரண்டு வருடங்களாக மீண்டும் வாசிக்கத் தொடங்கும்போது, இடையில் குறுக்குச்சால் உழுவதுபோல் ந.சிதம்பரசுப்ரமண்யன் படைப்புகளை வாசிக்கத்தொடங்கினேன்.. கும்பகோணம் இளம் வாசகர் ஹரிஷ்தான்
ந.சி.சு.வை மீண்டும் வாசிக்க வைத்தவர். அவருடைய நாகமணி நாவல் வாசிக்கக் கொடுத்தார். நாகமணி நாவல் உருவாவதற்குக் காரணமாக அமைந்தவை, தன்னுடைய எழுத்துக் கட்டுரைகளே என்று ந.சி.சு.வும் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்வில் இருக்கவேண்டிய குணங்களை, கலையாகவும் ஆன்மீகமாகவும் ஆராய்ந்து பார்த்திருக்கிறார். அவருடைய கதைகளைப்போல் அவருடைய கட்டுரைகளும் வாசிக்க ஏதுவாக இருக்கின்றன. தன் வாழ்விலிருந்து, பிறத்தியார் அனுபவத்திலிருந்து, ஏற்கெனவே நம்மிடம் புழங்கிக்கொண்டிருக்கும் கதைகளிலிருந்து பேசுகிறார். கட்டுரைகளில் அவர் கேட்கும் கேள்விகள் நமக்கானவை என்பதைப் போல் சொல்லாமல் சொல்லிக் கேட்கிறார்.
- ராணிதிலக்