Description
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களித்த மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான எம்.வி.வெங்கட்ராம், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், எட்டு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள், நாடகங்கள், சிறுவர் நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொடர்ந்து எழுதிக் குவித்ததால் (writer's cramp) கைநடுக்கம் ஏற்பட்டு, தன் வாழ்வின் கடைசி பதினேழு வருடங்கள் அவரால் எழுத இயலாமல் போனது. இலக்கியத்துள் வராத சௌராஷ்ட்டிரர்கள் வாழ்வின் சில பகுதிகள் அவர் படைப்புகளில் பதிவாகியுள்ளன. 'தேனீ' இலக்கிய இதழின் ஆசிரியரான இவர், டிரான்ஸ்கிரஸிவ் (Transgressive) வகை எழுத்தை தம், 'காதுகள்' நாவல் மூலம் முதன்முதலில் தமிழுக்குக் கொண்டுவந்தார்.
சௌராஷ்ட்டிரர்கள் வாழ்வை, அவர்களது மொழியில், தமிழ் லிபியில் பதினேழு அத்தியாயங்கள் எழுதிய பின், தமிழ் மொழியில் அவரால், அதை முழுமையாக எழுத இயலாமல் போனது. அவர் எழுதி, நம் கைக்குக் கிடைத்தவை நான்கு அத்தியாயங்கள் மட்டுமே. அவரது முற்றுப்பெறாத நாவலின் முதல் பதிப்பாக கிட்டத்தட்ட எழுதி நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் நூல் இது.
* ரவிசுப்பிரமணியன்