நமது கச்சத்தீவு


Author: புலவர் செ. ராசு

Pages: 100

Year: 2024

Price:
Sale priceRs. 120.00

Description

கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு எம்.ஏ., பி.எச்.டி.ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசில் 02.01.1938 அன்று பிறந்தவர். பெற்றோர் சென்னியப்பகவுண்டர் - நல்லம்மாள், ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் 1955 ஆம் ஆண்டு பள்ளியிறுதிக் கல்வியை முடித்து, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்றார். தான் பயின்ற ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார் (1959 - 1963).
பண்டைய எழுத்துக்களைப் படித்துக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி ஆய்வு அனுபவத்தால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் வெளியீடான தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் தொகுதியை வெளியிட்டார் (1983), இந்நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது. பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் (1982 - 1998) ஓய்வு பெற்றபின் ஈரோட்டில் தங்கி ஐம்பதாண்டு கால (1959- 2009) ஆய்வுகளை நூல்களாக வெளியிட்டு வருகிறார். சேதுபதிகள், தொண்டைமான்கள், மராட்டியர், இசுலாமியர், வேட்டுவர், வேளாளர், பாளையக்காரர்கள், பிற சமூக வரலாற்று ஆவணங்களை வெளியிட்டுள்ளார். நொய்யல்கரைக் கொடுமணல் நாகரிகத்தை வெளிப்படுத்தியதுடன் காலிங்கராயன், சின்னமலை வரலாறுகளையும் ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். கல்வெட்டறிஞர், தொல் ஆய்வுக்காணியாளர் உட்படப் பல பட்டங்களையும், தமிழக தொல்லியல் கழக விருது, இந்தியக் கல்வெட்டாய்வுக் கழக விருது உட்படப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்100 புத்தகங்களும், 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், நூற்றுக்கணக்கில் கண்டுபிடித்த செப்பேடுகளும், கல்வெட்டுகளும் இவர் ஆய்வுத் திறனைவெளிப்படுத்துகின்றன. ஐந்து உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வுரை நிகழ்த்திய இவர், தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

You may also like

Recently viewed