Description
பிணக்கூராய்வுத் தொழிலாளர்களின் அக. புற வாழ்வியலை விசாலமாகப் பேசுகிறது இந்நாவல். பார்க்கவே அருவருப்பாகத் தோன்றும் உருச் சிதைந்த பிணங்களை சகஜமான மனநிலையில் உடற்கூராய்வு செய்யும் தொழிலாளர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவலங்கள். பாடுகளை இயல்போட்டமாகக் கூறிச் செல்லும் இந்நாவல் புதியதோர் வாசக அனுபவத்தைத் தருவதாக அமைந்துள்ளது. தினந்தோறும் பிணங்களோடு உறவாடும் மனிதர்களின் எளிய வாழ்க்கை உருவாக்கித் தரும் சித்திரங்கள் கனமானவை என்பதோடு சஞ்சலத்தையும் தருபவை என்றுரைக்கிறது நாவல்.