Description
மதுரை நகரை முன்வைத்து ஏற்கெனவே வந்துள்ள புத்தகங்களில் இருந்து மாறுபட்ட நிலையில் சமகாலத்தில் வாழ்கின்ற மதுரைக்காரர்களை முன்னிறுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளில் நூலாசிரியர் எதிர்கொண்ட மதுரை நகரம் பற்றிய சுவையான பல தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. எதிர்காலத் தலைமுறையினருக்கு மதுரை நகரம் இப்படியெல்லாம் இருந்தது என்று அறிந்திட உதவுகிற இந்தப் புத்தகம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றுப் பதிவாக மாறுவது ஒருவகையில் விநோதம்தான்.