அகலிகை தொன்மமும் புனைவும்


Author: மு. சீமானாம்பலம்

Pages: 152

Year: 2024

Price:
Sale priceRs. 190.00

Description

அன்போ அதிகாரமோ. வரமோ சாபமோ, ஆண் செலுத்துவதும் பெண் அதனை ஏற்று மௌனிப்பதுமான சமநிலையின்மை உடைமைச் சமூக ஏமாற்றின் தொடர்ச்சி எல்லாச் சொல்லுக்கும் பொருள் இருப்பது போல், அவற்றிற்கோர் அரசியலும் இருக்கிறது. அது ஆண்களின், அதிகாரத்தின் அரசியல், கற்பு எனும் பொதுச்சொல் பெண்ணின் ஒழுக்கத்தைக் குறிப்பதற்கான உடல் அரசியலாகும்போது, பத்தினியென்று உயர்தகைமையிலும், பரத்தையென்று இழிதகைமையிலும் பேசுபொருளாகிறது.அகலிகையெனும் உடைமை. ஆண்களின் மனத்தில், எழுத்தெனும் ஊடகத்தில் அவர்கள் விரும்பியபோது கனியாகவும். விரும்பாதபோது கல்லாகவும் ஆகிறாள். இயற்கையுணர்வான காமம். பண்பாட்டுப் புனைவுணர்வான கற்பால். தண்டனைக்குள்ளாகும் அகலிகைத் தொன்மம் குறித்துப் பேசும் படைப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். மு.சீமானம்பலம், சென்னையிலுள்ள அரசு கல்லூரி ஒன்றில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தமிழ்ப் புதினங்களில் இருத்தலியல் (2006). அகலிகை: கதைகள்-கவிதைகள்-நாடகங்கள் (2024) ஆகியன இவரது பிற நூல்கள்.

You may also like

Recently viewed