Description
அப்போது அவருக்கு இருபது வயது. ஒரு நாள் தூங்கி எழுகையில் அவரது ஒரு விரல் பேனாவாக உருமாறியிருந்தது. தரையில், சுவரில், மரங்களில் கிறுக்கத் தொடங்கினார். எழுத்து வந்தது. ஒரு மாளிகை குறித்து எழுதினார். மாடமாளிகை, முழுமையாக எழுதி முடிக்கையில் மாளிகை குலைந்து சரிந்து குடிசையாகியிருந்தது. அவருக்குப் புரியவந்தது. இந்தப் பேனா யாருக்கானது, எதை மட்டும் எழுதுமென்று, பிறகு அவர் ஒரு கதை எழுதினார். குருவியின் கதை, கூடு இழந்த குருவியின் கதை.