Description
இல்லறம், துறவறம், தெய்வம், ஊழ், மேலுலகம் எல்லாவற்றினுள்ளும் மனிதனுக்கான அர்த்தம் தேட வேண்டும். அரசனை வள்ளுவரின் அறவியலும் அழகியலும் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். வள்ளுவரின் அறவுணர்வு இப்படித்தான் தன் கால வரலாற்றுச் சூழலில் இயங்கியிருக்க முடியும். வர்க்கப் போராட்டத்தில் வள்ளுவர் மக்கள் சார்பில்தான் நின்றார். அறத்தை நிலைநிறுத்தும் நோக்கில் நின்றார். இருவேறு உலகங்கள் ஏற்படுவதை வள்ளுவரால் ஏற்க முடியவில்லை. ஊர் நடுவில் இன்னும் ஊருணிகள், பழ மரங்கள். மன்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவை அழிந்துவிடக்கூடாது. வரலாற்றில் இவற்றைத் தக்கவைக்க வேண்டும். இவற்றை எல்லாம் மார்க்சியப் பார்வையில் இந்நூற் கட்டுரைகள் அணுகுகின்றன.