Description
வள்ளலாரின், இராமகிருஷ்ணரின், காந்தியடிகளின் பொன்னுரைகளை அப்படியே சொன்னால் இன்றைய உலகில் அவை உள்ளத்தின் உள்ளே போகமாட்டா. பொன்னுலகம் அவற்றைக் கதைகளின் ஊடே இடம்பெறுமாறு படைப்புகள் வந்தால் அவை படிக்கப்படும்; கேட்கப்படும். கேட்பவர் வலிக்கவும் சலிக்கவும் சொல்லாமல் இதமாகவும் பதமாகவும் சொல்லும் உத்தியே கதைக்குரியதாக இருக்க வேண்டும். இன்றைக்குப் பாலுணர்ச்சியே மையமாகக் கொண்டு கதைகளும், ஊடகப் படைப்புகளும், காட்சிகளும் மலிந்து நிற்கும் போது சமூதாயத்தை நெறிப்படுத்தும் நூல்களைக் கற்பாரா? என்று எண்ணி வாளா இருக்க முடியாது; கற்பார் என்றே நம்பிக் கடமை செய்வதே வேண்டும். அவ்வுணர்வில் எழுந்ததே இப்பொன்னுலகம்.