வைகுண்ட சுவாமிகளின் வாழ்வும் வழிகாட்டலும்


Author: முனைவர் அ. லதா மகேஸ்வரி

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 170.00

Description

நூலாசிரியர் முனைவர் திருமதி அ.லதா மகேஸ்வரி அவர்கள் குழித்துறைஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். நூலாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர், பதிப்பாசிரியர் என்ற நிலைகளில் தமிழுலகிற்குப் பல நூல்களை நல்கியுள்ளார். அய்யா வைகுண்டர், ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும் நன்மைக்காகவும் பாடுபட்ட சமூகநலச் சீர்திருத்தவாதியாக விளங்கிய அருளாளர் ஆவார். பதிகளும் தாங்கல்களும் கல்விச்சாலையாகவும். அறச்சாலையாகவும் தருமச்சாலையாகவும் வழிபாட்டு ஒருங்கிணைப்புத் தலங்களாகவும் விளங்கக் காணலாம். அன்றைய ஆளும் வர்க்கத்தினரையும் அதிகார மேட்டுக்குடியினரையும் எதிர்த்துப் போராடி வெற்றியும் கண்டவர். வைகுண்ட சுவாமிகளின் கொள்கைகளில் பெண்ணியம் தொடர்பானபுரட்சிகரமான சிந்தனைகள் என்றென்றும் போற்றுதலுக்குள்ளாவன. அய்யா வைகுண்டர் சுட்டிக்காட்டிய சமபந்தி போஜனம், சமத்துவக் குடியிருப்பு இன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு வழிகாட்டியாக விளங்கிற்று எனலாம். வைகுண்ட சுவாமிகள் வாழ்ந்த காலச்சூழலில் மக்களிடையே போட்டியும், சமயப் பூசலும் மிகுந்திருந்தன, சிறுதெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, பேய் வழிபாடு, உயிர்ப்பலி, சடங்கு ஆசாரங்கள் முதலியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே இவ்வழிபாட்டு முறைகளை ஒழிக்க விழிப்புணர்வு ஊட்டினார். ஓரிறைக் கொள்கையை அறிவுறுத்தினார். அன்பு நெறியே உயர்நெறி என்று போதித்தார். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றும் மக்கள் இன்று உலகெங்கும் காணப்படுகின்றனர்.

You may also like

Recently viewed