Description
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பல்வேறு வகைகளில் ஆராயப்பட்டுள்ளது. இந்த நூல், அவர்களின் தலைமைத்துவம் பற்றி விவரிக்கிறது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் அனைத்துப் பக்கங்களிலும், தலைமைப் பண்பு பளிச்சிடுவதை சாதாரணமாக அவதானித்தாலே விளங்கிக் கொள்ள முடியும். இதனை அழகாக
தொகுத்துத் தருகிறது இந்நூல்.
முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் பாடம் புகட்டும் ஒரு பொக்கிஷம் இந்த நூல் என்றால் அது மிகையாகாது.
இன்று தலைமையை விரும்பாத எவரையும் காண முடியாது. அந்தப் பதவியை அடைந்தவர்களிடம் ஏதோ ஒரு வகையில் ஆணவம் தொற்றிக்கொள்ளும் சூழ்நிலையில், அரேபிய நாட்டையே தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம், மேலோங்கியிருந்த நற்குணங்களைப் பட்டியலிடுகின்றது இந்நூல்.
இறைத்தூதர், தத்துவ வித்தகர், சட்டம் இயற்றுபவர், போர் வீரர், கருத்தை ஆள்பவர், அறிவார்ந்த நம்பிக்கைகளை மீட்டெடுப்பவர், உலக ஆட்சியையும் உள்ளங்களின் ஆட்சியையும் திறம்பட நடத்திக் காட்டியவர் என முஹம்மது (ஸல்) அவர்களின் பன்முகத் திறமைகள் பற்றி
நேர்த்தியாக விவரிக்கும் இந்நூல் அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும்.