அனைவருக்கும் பொருந்துமா பொது சிவில் சட்டம்?


Author: கவி கா. மு. ஷரீஃப்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 75.00

Description

முதலாளித்துவம் எந்த ஒரு தேசத்தையும் காப்பாற்றியதாக வரலாறில்லை. பிற்போக்குச் சக்திகளைத் தூண்டி விட்டு நாட்டை நாசப்படுத்தாமல் இருந்ததுமில்லை. அந்த வேலையைத்தான் இன்றைய இந்திய முதலாளித்துவம் செய்து கொண்டிருக்கிறது. அச்சக்திக்கு ஆட்பட்ட சிலரின் இழிந்த சுயநலச் செயலே மதத்திற்கு ஆபத்து என்பதும்; சாதிச் சண்டைகளையும் சமயச் சண்டைகளைத் தூண்டுவதாகவும் பரிணமித்துள்ளது. இத்தகு செயல்பாட்டின் ஒரு அங்கமே, “ஒரேவிதச் சிவில் சட்டம் தேவை” என்பதாகும். இது தேவையற்ற குரல்! தேவைப்படுகின்ற குரலுக்கு மாறுபட்ட குரல்! மக்களைத் திசை திருப்புகின்ற குரல்! இக்குரலுக்குச் செவி சாய்ப்பது, தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்ற செயலாகவே முடியும். இத்தகு குரலினரை இனம் கண்டு ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஒருமைப்பாட்டுணர்வை உண்டாக்கிட எழும் குரலுக்குச் செவி சாய்ப்பதே மக்களின் கடமையாதல் வேண்டும்! இன்றேல் இந்தியா மீண்டும் அடிமை நாடாவது திண்ணம்! இதுவே உண்மை! இந்த உண்மையை அறிந்தோர் யாரும், “எல்லோருக்கும் ஒரேவிதச் சிவில் சட்டம் வேண்டும்” எனும் கூப்பாட்டை ஏற்கமாட்டார்கள். - கவி கா.மு. ஷெரீப்

You may also like

Recently viewed