Description
இறை வசனங்கள் மீதும், இறைவனின்
வாக்குறுதிகளின் மீதும் நம்பிக்கை பூண்டு, வல்லரசுகளை எதிர்கொள்ள முன்வந்த “அந்த இறை நம்பிக்கையாளர்களை” முட்டாள்களாகக் கருதினர்.
கொண்ட கொள்கை “அந்த இறைநம்பிக்கையாளர்களை” ஏமாற்றி விட்டது எனவும், அவசரப்பட்டு ஆபத்தை நோக்கி பாய்கின்றனர் எனவும் அவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
இறை வசனங்களில் சில பத்ரின் போர்க்களத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடியவையாகும் என விளக்கம் கூறுவோரும் இன்று பெருகி விட்டனர். இந்தக் கருத்துக்களுக்கு ஆதரவளிக்காதோர் இன்று விமர்சிக்கப்படுகின்றனர். தங்களின் கோழைத்தனத்தை மறைப்பதற்கான ஓர் தந்திரம்தான் இத்தகு விமர்சனங்கள் என்றால் அது மிகையல்ல.
பத்ர் தந்த சமூக படிப்பினை தனிப்பட்டதோ காலங்கடந்ததோ அல்ல. அவ்வாறு நம்பவும், நம்ப வைக்க முயல்வோரும் உள்ளனர்.
இந்நூலிலிருந்து...