Description
"போதமும் காணாத போதம்" என்ற இந்தத் தொடர் இணையத்தில் திங்கட்கிழமை தோறும் வெளிவந்தபோதும் தொடர்ந்து வாசகர்கள் வாசித்தார்கள். நான் இரண்டு முறை வாசித்தேன்! இந்தத் தொடரின் மிகவும் முக்கியமான அம்சம் ஈழ மக்களின் பண்பாடு & வழிபாடு சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் ஆதிக்க சக்திகளால் அவர்களின் மரபுரிமைகள் எவ்வாறெல்லாம் பிடுங்கப்படுகின்றன என்பதை உரத்துப் பேசுவதாக இருக்கின்றது. தொன்மங்களை நினைவு கூர்ந்து, ஆழமான பண்பாட்டுச் செழுமை கொண்ட ஈழத் தமிழ் நிலம் தங்கள் மேலான இன அழிப்புப் போரை எவ்வாறு எதிர்கொண்டது என்பதையும் சமரசமற்று எழுதியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.