Description
தன் கவிதை நெடுக பெண் உடலை தாரா பிரபஞ்சமாகச் சித்தரிக்கிறார். சூழல் அழிப்புக்குப் பெண்ணிய நோக்கில் பெண்ணியலாளர்கள் விளக்கம் தருகிறார்கள். டாவோ இயற்பியல் பேசும் காப்ரா (Fritjof Capra), மனிதன் பெண்ணை பிரபஞ்சமாகப் பார்க்கிறான், அவளை அடக்கும் ஆளுமையைப் பெற விரும்பியே சுற்றுச்சூழலை அவன் அழிக்கிறான் என்கிறார். அத்தகைய அழிவை நிறுத்தி தன் காதலால் புதிய பண்புகளை நோக்கி அனைத்தையும் வழிநடத்திச் செல்லும் பேரன்பு மிக்கதாய் மிளிர்கின்றன தாராவின் கவிதைகள்.
- கவிஞர் கரிகாலன்