தமிழகத்தின் தியாகச் சுடர்கள்


Author: எஸ்.கே.கார்வேந்தன்

Pages: 496

Year: 490

Price:
Sale priceRs. 500.00

Description

திரு. Dr. S.K.கார்வேந்தன் B.sc., LL.M.

04.09.1975 முதல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். 1985-1990 வரை சர்வதேச இளம் வழக்கறிஞர் சங்க இந்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றினார். 1988 முதல் 2011 வரை தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினராகவும், 1995 முதல் 2005ஆம் ஆண்டு வரை அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும், பின்னர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்திலிருந்து அகில இந்திய பார்கவுன்சில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச வழக்கறிஞர் சங்கத்தில் கவுன்சிலராக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்திய நாட்டின் சட்டக்கல்வி மேம்பாட்டிற்காக சிறந்த பணியாற்றி யதற்காக 2000ஆவது ஆண்டிற்கான 'சட்டநாள் தேசிய விருது' பெற்றார். வழக்கறிஞர் தொழிலின் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' நீதியரசர் திரு.வெங்கட்ராமய்யர் பவுண்டேசன் 18.03.2012 இவருக்கு வழங்கி கௌரவித்தது. சமூக நீதி மற்றும் சமூக சேவைக்கான சர்வதேச விருது மலேசியா நாட்டில் ஈப்போ நகரில் 20.07.2014 அன்று இவருக்கு வழங்கப்பட்டது. 11ஆவது மற்றும் 14ஆவது மக்களவைக்கு இருமுறை பழனி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். 2004-2009 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போது 1177 கேள்விகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து மிக அதிகமான விவாதங்களில் பங்கேற்று சாதனை புரிந்ததற்காக இந்தியாவின் முதல் SANSAD AWARD பெற்றவர். இளம் வயதிலேயே விவசாயிகள் போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை சென்றவர்.

2010 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணைய உறுப்பினராக 6 ஆண்டுகாலம் பணியாற்றினார்.

அமெரிக்க நாட்டில் ப்ளோரிடா நகரில் இயங்கிவரும் யோக சமஸ்கிருதம் சர்வதேச பல்கலைக்கழகம் கடந்த 15.10.2017 அன்று இவருக்கு 'சமூக நீதிக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

தற்பொழுது தமிழக பா.ஜ.க வின் மாநில செய்தித்தொடர்பாளராகவும், தேசிய இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பி னராகவும் பணியாற்றி வருகிறார்

You may also like

Recently viewed