Description
நவீனத் தமிழ் அரங்கத்தின் வரலாறு இன்னமும் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கும் நிலையில், அத்துறையில் பெண்மைப் பதிவுகளைக் குறித்த வாசிப்பை இந்த நூல் நிகழ்த்துகிறது. அரங்கத்தைப் பெண்களுக்கு இதமானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்க நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். பெண்கள் அரங்கத்தை தம்வயமாக்கி புதியதொரு அழகியல், பொருண்மை, அனுபவம் தருவதற்குச் செய்ய வேண்டிய உழைப்பும் மிக அதிகம். இத்துறையில் செயல்படும் ஆண்கள் பெண்சார் சிந்தனைகள், இருப்பு, அனுபவம் ஆகியவற்றைக் கூர்மையாக அவதானித்து கலையாக்கம் செய்ய பயணப்பட வேண்டிய பாதையும் மிக நீண்டது. இந்த உரையாடலைத் தொடங்கி வைக்கும் பணியை இளம்பிறை செய்துள்ளார். தனித்தனித் தீவுகளாக படைப்பாளிகள் தொழிற்படும் சூழலில் இளம்பிறை தான் சாராத அரங்கம் குறித்து அக்கறையோடு மேற்கொண்ட இந்த ஆய்வுக்கு தோழமை மிக்க அன்பு.
- அ. மங்கை