மன் கி பாத்- மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்


Author: மனோ தங்கராஜ்

Pages: 144

Year: 2024

Price:
Sale priceRs. 100.00

Description

"சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நாடாளுமன்ற தேர்தலை(2024) நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். கடந்த பத்தாண்டுகள் மோடி அவர்களின் தலைமையில் ஆட்சிசெய்த பாஜக அரசு வேலையின்மை, விலைவாசி உயர்வு என்ற அவலங்களை மக்களுக்கு பரிசாக அளித்தே இத்தேர்தலை சந்திக்க உள்ளது. மக்களிடம் எடுத்துக்கூற சாதனைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் மக்களை பிளவுப் படுத்தும் மதவெறியையே பிரதான உத்தியாக கொண்டிருக்கிறது இந்த அரசு. இதனை ஒரு இந்திய குடிமகனாகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரை பின்பற்றும் திராவிட கொள்கை பிடிப்பாளனாகவும் மக்களுக்கு எடுத்துக்கூறவும், ஒன்றிய அரசின் ஏகபோக அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பவும் கடமை பட்டுள்ளேன். இந்த நோக்கில், தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசியுடன், "மன் கி பாத்: மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்" என்ற தலைப்பில் நான் பிரதமர் மோடி அவர்களுக்கு வைக்கும் 108 கேள்விகளை கொண்ட இந்த நூலை எழுதியுள்ளேன். 1000 கணக்கான கேள்விகளை முன் வைக்கும் அளவிற்கு அநீதிகள் நடந்திருப்பினும், ஒரு தொடக்கமாக, கல்வி, வேலைவாய்ப்பு, சாதிய ஏற்றத்தாழ்வு, மத வெறுப்பு, பெண்ணடிமைத்தனம், வளர்ச்சியின்மை என அனைத்து அம்சங்களில் இந்த ஆட்சி செய்த தவறுகளை 108 கேள்விகளுக்குள் வாசர்களுக்கு கடத்த முற்பட்டிருக்கிறேன்." மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சர்

You may also like

Recently viewed