Description
கடலூர் மாவட்டத்தின் வரலாறை ஆழமாகத் தொகுத்து எழுதப்பட்டிருக்கும் இந்த நூலின் நூலாசிரியர், எழுத்தாளர்,வரலாற்றாளர்,ஆய்வாளர்,துணை ஆட்சியர் நிலையில் ஓய்வு பெற்ற இரா.இராதா கிருட்டினன் அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிவேன். முதன் முதலில் வெள்ளையர்கள் வந்து இறங்கிய இந்தியாவின் முதல் கிழக்கிந்திய கம்பெனி தலைநகரமான கடலூரைக் குறித்து இத்தனை விரிவாகவும் ஆழமாகவும் ஒரு நூல் இதுவரை எழுதப்படவில்லை.