Description
ஆலிஸ் என்ற சிறுமியின் கனவுலகத்தை மிக அழகாக விரித்து எழுதியதே இந்நாவல். கடந்த 150 ஆண்டுகளைக் கடந்தும் இப்புனைவு சிறார்கள் மட்டுமல்லாது வயது வித்தியாசமின்றி அனைவரையும் வசப்படுத்தியவாறே விளங்குவது இதன் சிறப்பம்சமாகும்.
கடிகாரத்தில் நேரம் பார்த்தபடி பேசிக்கொண்டு செல்லும் ஒரு முயலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அதனைப் பின்தொடரும் சிறுமி ஆலிஸ் அதோடு சேர்ந்து முயல்வளைக்குள் விழுவதோடு தொடங்கும் கதை அங்கு ஆலிஸ் சந்திக்கும் ஆச்சரியங்களையும் வினோதங்களையும் விவரித்துச் செல்கிறது.