Description
இலங்கையரான றெஜி சிறிவர்த்தன (1922 2004) தென்னாசியாவின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த புலமை உடையவர், தீவிரமான மனித உரிமைச் செயற்பாட்டாளர், பல்மொழி அறிஞர், சிறந்த கவிஞர், நாடக ஆசிரியர், கலை இலக்கிய விமர்சகர். :சோவியத் யூனியனின் உடைவு' தமிழில் வெளிவரும் றெஜி சிறிவர்த்தனவின் முதலாவது நூல். 1980க்குப் பிந்திய உலக வரலாற்றிலும், இடதுசாரி அரசியல் வரலாற்றிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின் பல்வேறு அம்சங்களை இயக்கவியல் வரலாற்று நோக்கிலிருந்து இந்நூல் விரிவாக ஆராய்கின்றது. தமிழில் முதன்முறையாக மார்க்சிய அரசியல், சோவியத் வரலாறு, ஆயுதப் புரட்சி, அரசியல் அறம் என்பன பற்றி விரிவான, ஆதாரப்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் ஒரு திறந்த விவாதத்தை இந்நூல் தொடக்கி வைக்கிறது.