Description
நார்வேயைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட்ஹாம்ஸன். தனது இளமைப் பருவத்தில் பசியை நிரம்ப அனுபவித்தவர் என்று நினைக்கிறேன். தனது அனுபவத்தையே, 'sult' என்னும் புதினமாக 1890 ல் வெளியிட்டிருக்கிறார். இதன் ஆங்கில வடிவம், 'Hunger'. க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்ட இதன் தமிழ் வடிவமே, ‘பசி’.
ஒரு மிகப்பெரிய எழுத்தாளனாக வர ஆசைப்பட்டு பசியின் கோரப்பிடியில் சிக்கி நகரத்துத் தெருக்களில் அலையும் ஒரு இளைஞன் தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல இப்புதினம் அமைக்கப்பட்டுள்ளது.