Description
வேதங்கள் சகல ஜீவராசிகளும் முக்கியமாக மனிதகுலம் முழுவதும், மேன்மை அடைவதற்கான தர்மங்களை வேதங்கள் எடுத்துச் சொல்கின்றன. வேதங்களில் கூறப்படாத தர்மம் எதுவும் இல்லை. வேதங்களை ஓதுபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
வேதங்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் பல ஆயிரம் வருஷங்களாக நல்ல தொடர்பும், உறவும் இருந்து வந்துள்ளன. புகழ்பெற்ற தமிழ் நூல்கள் எல்லாம் வேதங்களின் பெரும் சிறப்பை ஒப்புக் கொண்டிருக் கின்றன. தமிழ் மொழிக்கும், வேதங்களுக்கும் இடையே துவேஷம் ஒருபோதும் இருந்தது கிடையாது. வேதங்களைத் தமிழகமும் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டுதான் வந்திருக்கின்றது.
தொல்காப்பிய காலம், சங்க காலம், சங்கம் மருவிய காலம், அதற்குப் பிறகு பக்தி இயக்கக் காலம், தமிழக மூவேந்தர்கள் ஆட்சிக்காலம், பாரதியுகம் என்று சொல்லப்படுகின்ற தற்போதைய இலக்கியக் காலம் ஆகிய எல்லா காலங்களிலும் எழுதப்பட்டுள்ள உயர்ந்த தமிழ் நூல்கள் எல்லாம் வேதங்களை வரவேற்று மரியாதை செய்துள்ளன என்பதை ஏராளமான உதாரணங்களுடன் நமது ஸ்ரீ மடத்தின் அத்யந்த ப்ரியசிஷ்யர் ஸ்ரீ K.C. லக்ஷ்மிநாராயணன் (மூத்த பத்ரிகையாளர்) "வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள்" என்ற பெயரில் நூலாக ஒரு பெரிய நூலாக எழுதியிருக்கிறார், என்பதை கேட்டு சந்தோஷிக் கிறோம். இன்றைய சிக்கலான நேரத்தில் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேதங்கள் கூறுகின்ற மார்க்கமே சிறந்தது என்றும் அவர் எடுத்துக் காட்டி யிருக்கிறார்.
வாழ்வில் மேன்மையடைய விரும்புகின்ற எல்லோரும் இந்த மிக முக்கியமான நூலை வாங்கி படித்து, வேத நெறிகளாக விளங்கும் தர்மங்களை ஊக்கத்துடன் கடைப்பிடித்து, சகல நன்மைகளையும் அடைய வேண்டும் என ஆசீர்வதிக்கிறோம்.
ஸ்ரீ கே.சி. லட்சுமிநாராயணன் மேலும் இத்தகைய நல்ல நூல்களை எழுதி வெளியிட்டு சமயத் தொண்டு களை செய்து கொண்டு ஸ்ரீ மஹாதிரிபுர ஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ர மௌலீஸ்வர ஸ்வாமியின் கிருபையால் ஸகல மங்களங்களையும் அடைந்து பரம க்ஷேமமாக வாழ வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறோம்.
-நாராயணஸ்ம்ருதி