மகாகவி சுப்ரமணிய பாரதியார்- சிந்தனைகள், விவரங்கள், நிகழ்வுகள்


Author: என்.விஜயராகவன்

Pages: 544

Year: 2024

Price:
Sale priceRs. 600.00

Description

மகாகவி சுப்ரமணிய பாரதியார்

(சிந்தனைகள், விவரங்கள், நிகழ்வுகள்)

அவருடைய வாழ்க்கைச் செய்திகளைத் தொகுத்து எழுதப்பட்ட புத்தகம்.
விவேகானந்தரைப் போல பாரதியார் 39 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார். ராஜாஜி சரியாகச் சொன்னது போல், பாரதியாரின் வாழ்க்கை உணர்வு பூர்வமாகவே இருந்தது. அவை பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அவர் வாழ்வில் ஒளிர்விட்ட நிகழ்ச்சிகள் உண்மையானவை, ஏற்கக் கூடியவை, மறுக்கக் கூடியவை பற்றி நிறைய பேசப்பட்டுவிட்டன. இவ்வொளி முத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக்கிக் கோர்த்து, வாசகர்கள் படிக்க ஓர் அழகிய ஆபரணமாக இவ்வாசிரியர் அளித்திருக்கிறார். வ.வெ.சு.ஐயர், அரோபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா, வ.உ.சி., வாஞ்சிநாதன், முக்கியமாக அவருடைய அருமை அப்பாவி மனைவியான செல்லம்மா இவர்களுடன் இணைந்து அவர் தன்னிகரில்லாத படைப்பாளியாகத் திகழ்ந்தார். இது வாழ்க்கைச் சரிதம் அல்ல; பாரதியாருடைய புரட்சிகரமான, ஆக்ரோஷமான சிந்தனைகளின் வெளிப்பாடு ஆகும். படிப்பறிவு இல்லாத ஒரு மனிதனையும், தன்னுடைய எளிய, சரளமான எழுத்து நடையால், பாரதியார் நெருங்குகிறார்.

திரு.என்.விஜயராகவன்
30 வருட அனுபவத்துடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். பல புத்தகங்களை எழுதியுள்ள இவர். நீதித்துறையில் தேசிய மற்றும் மாநில அளவில் வல்லுனராக இருக்கிறார். பத்திரிகையாளராகவும் இருக்கும் இவர். சட்டத்துறைப் பத்திரிகைகளில் எழுதுவதைத் தவிர, பல சமூகப் பத்திரிகைகளிலும் செய்தித் தாள்களிலும், சட்ட சம்பந்தமான விஷயங்களை எழுதி வருகிறார்

You may also like

Recently viewed