Description
இவ்வரிய நூலை எளிதில் சுருக்கமாக அறிந்து கொள்ளுமாறு அன்பர் இந்நூலை யாத்துள்ளமை மிகவும் பாராட்டுதற்குரியது; அவர்தம் இச்சீர்மையான பணி வாழ்த்தி, வணங்குதற்கு உரியது. மிகப்பெரிய அரிய நுண்ணிய கருத்துக்களைக் கொண்ட திருமந்திரத்தை ஓர் அறிமுக நூலாக எளிமைப்படுத்தி, இந்நூலாசிரியர் அன்பர் வெங்கடரமணி அவர்கள் தமிழன்னையின் இலக்கியச் செல்வத்திற்கு மேலும் வளம் சேர்த்துள்ளார். இத்தகைய தொண்டு அன்னவர்க்கு இயல்பாகக் கைவந்த ஒன்றே. அவர்தம் இத்தகைய பணி மேன்மேலும் தொடர்ந்து சிறந்திட இறையருள் செழித்திட வேண்டும்.