Description
கவிதை என்பது உணர்ச்சியைச் சிந்தனையுடன் கலந்து வெளிப்படுத்தும் ஒரு வடிவம். அதனால், வார்த்தை ஜாலங்கள் குறைத்து, சொல்ல வந்ததைச் சுருக்கமாக்கி, வேண்டாத சொற்களைக் களைந்து என வார்ப்பாக அமைய வேண்டும். அப்படி முத்துப் போல பதங்கள் கோத்து, 'படிமங்கள் உறங்குவதில்லை' எனும் தலைப்பில் பழநிபாரதி எழுதியிருக்கும் அத்தனை கவிதைகளும் நட்சத்திர அணிவகுப்பு.
சிறந்த கவிஞன் தன் உள்ளத்தில் உணர்ந்த காட்சிகளைத் தன் வரிகளால் வாசகனின் உள்ளத்திற்குக் கடத்த வேண்டும். அந்த உணர்வுக் கடத்தலுக்குப் பொருத்தமான சொற்களைக் கையாள வேண்டும். அந்த வகையில் இந்த, ‘படிமங்கள் உறங்குவதில்லை' தொகுப்பு நிச்சயம் வாசிப்பவரைப் படிமங்களுக்குள் உழலச் செய்யும்.