சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சட்டம்


Author: நூஹ் மஹ்ளரி

Pages: 132

Year: 2024

Price:
Sale priceRs. 130.00

Description

ஷரீஅத்தின் – இஸ்லாமிய சட்டங்கள் அடிப்படைகள், கோட்பாடுகள் எக்காலத்திற்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை, மாற்றத்திற்கு உள்ளாக்க முடியாதவை. அதே வேளை ஷரீஅத் ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும். மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அவனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காது. தாங்க இயலாத சுமையை அவன்மீது சுமத்தாது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளுக்கும், சிறுபான்மையாக வாழும் நாடுகளுக்கும் இன, கலாச்சார, பாதுகாப்பு ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களிடையே ‘சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சட்டம்’ என்ற சொல்லாடல் சமீபகாலமாகப் பரவலாகி வருகிறது. உலகில் 60 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் 150 நாடுகளில் சிறுபான்மையினராகவும் வாழ்கின்றனர். பெரும் கூட்டத்தினரிடையே வாழும் சிறு கூட்டத்தினர், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் மற்றவர்களைவிட வேறுபட்டிருப்பார்கள். தங்களுடைய இஸ்லாமிய அடையாளங்களைக் காப்பதில் முழு முயற்சி செய்வார்கள். இச்சூழலில்தான் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கான ஃபிக்ஹ் – புரிதல் – சட்டம் குறித்த தேவை இருக்கின்றது. பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள், சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல், சகோதர சமயத்தவருடன் இருக்க வேண்டிய உறவு போன்ற பல்வேறு துணைத் தலைப்புகளுடன் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஏற்படும் பல்வேறு கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில்களை இந்நூலில் விளக்கியுள்ளார் மௌலவி நூஹ் மஹ்ழரி.

You may also like

Recently viewed