Description
தோழர் தியாகுவின் தேர்தல் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம். இந்த முடிவு கேட்டதும் நான் கடும் சினத்தில். 40 வினா தொடுத்துத் தியாகுவைக் குடைந்தெடுக்க முயன்றேன். அவரும் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக 40 விடைகள் அளித்தார். இப்போது புத்தகமாக.
நானும் தோழர் தியாகுவும் ஒரு கால் நூற்றாண்டுக் காலம் தேர்தல் அரசியல் குறித்துத் தொடர்ச்சியாக நடத்திய உரையாடல் அழகாக வந்துள்ளது. இது இன்றைய புதிய தலைமுறையினருக்கு (நான் பழைய தலைமுறையாகி விட்டேனே!) அரசியல் அறிவொளி கொடுப்பது திண்ணம்.