Description
சில ஆண்டுகளுக்கு முன்பு 1963இல் திராவிட முன்னேற்றக் கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டதையொட்டி அப்போது நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் மனம் விட்டு விவாதிப்பதற்கென நமது தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் “எண்ணித் துணிக கருமம்” என்ற தலைப்பில் அவரது கைப்பட எழுதிய உரையை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தேன். நம் இதய வேந்தர் அன்று எழுதியதை என் கையில் ஒப்படைத்தார். இன்று இந்தக் கருத்து கருவூலத்தை உன் கையில் ஒப்படைக்கிறேன். சிந்திக்க… செயல்பட ! … அன்புள்ள... மு.க மே – 3 – 2003