Description
அன்பர்களே, அன்னாரின் (பெரியாரின்) இடையறாத் தொண்டின் சிறப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா? உணரும் நிலையிலாயினும் இருக்கிறோமா? இல்லை. இல்லை என்றுதான் கூறத் துணிகிறது என் மனம். ஆம்! அன்னவர் சுமார் 30 வருட காலமாக நம்மை மனிதராக்க எடுத்துக்கொண்ட முயற்சியை இன்றும் உணர்ந்தோமில்லை. அவ்வளவு மடையர்கள்; மிருக வாழ்வு வாழ்பவர்கள் நாம். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டை கொடிய நெடுங்கடல்தான் பொங்கி அழித்தால் என்ன. அல்லது ஒரு பெரிய பூகம்பம்தான் ஏற்பட்டு அத்தனை பேரும் அழிந்துபோனால் என்ன? அப்படி நாசமடைந்தாலும் ஒரு அறிவுள்ள சமூகமாவது பின்னர் தோன்ற வழிபிறக்குமே!