Description
‘தொடுக்கப்படும் விளைவுகளில் நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து விடுகிற அல்லது பெரிய பாதிப்பாக எடுத்துக் கொள்ளப்படாத நிகழ்வுகளின் கூர்மை ஏற்படுத்துகிற காயம்.. பெரும் புண்களுக்கும் ஆறாத வடுக்களுக்கும் புரையோடல்களுக்கும் காரணியாக இருக்கிறது. அவைகளையே என் கதைகளாகவும், தேவையான தகவல் தேடல்களோடும் புனைத்திருக்கின்றேன். நிகழனுபவங்களால் ஒரு படைப்பாளி சமூகத்தால் உருவாக்கப்படுகிறான். அவன் எதை படைக்கிறான் என்பதைப் பொறுத்து அவன் யாரென்று சமூகம் தீர்மானித்துக் கொள்கிறது