Description
நாட்டில் ஐ.டி. நிறுவனம் தொடங்கிய முதல் பெண்ணான நூலாசிரியர் தனது 32 ஆண்டுகால அனுபவத்தில் 250-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அந்த வரிசையில் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியை நூல்களாக வெளியிட்டுள்ளார்.
கணினி வந்தபோது எதிர்த்தோர் ஏஐ தொழில்நுட்பத்தை வரவேற்பதை காண முடிகிறது. மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், இளைஞர்களுக்கு காதல் கவிதைகள், பெண்களுக்கு அழகுக்குறிப்புகள், முதியவர்களுக்கு உடல் நலனில் அக்கறை செலுத்த பரிந்துரை என அன்றாட தேவைகளில் மனிதர்களுக்கு உதவும் தோழனாக ஏஐ வளர்ந்துள்ளது.
மருத்துவத் துறையில் ஏஐ நினைவில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களின் தகவல்களைக் கொண்டு விளங்குகிறது. இதன் வரலாறு. வளர்ச்சி, ஆபத்துகளை விளக்குகிறது இந்த நூல்கள்.
இதோடு இணைந்து செயல்படும் பிளாக் செயின், கிரிப்டோகரன்சி, விர்ச்சுவல் ரியாலிட்டி, மெட்டாவெர்ஸ், 3டி ரிகன்ட்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்டவற்றை தொகுத்து மெட்டாவெர்ஸ் எனும் தனிநூலாக நூலாசிரியர் வெளியிட்டுள்ளார். நிஜ உலகில் செய்ய முடிவதையும், செய்ய முடியாததையும் அரங்கேற்றும் மாயாஜால உலகம்தான் மெட்டாவெர்ஸ், புரியாத புதிராக விளங்கும் ஏஐ தொழில்நுட்பத்தை அனைவரும் எளிதில் புரியும் வகையில் படைத்திருப்பது சிறப்பு.
நூலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சுயூ ஆர்' குறியீட்டை ஸ்கேன் செய்வதால், தகவல்களை எளிமையாக விளக்கும் விடியோவை காண முடிகிறது. எளிய தமிழில் வந்துள்ள தகவல் தொழில்நுட்ப நூல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது.