Description
ம.சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள்
நண்பர் ஸ்டாலின் குணசேகரன் இச்சிறுநூலில் ஒரு புதிய பார்வையில் சிங்காரவேலருக்கு உரிய புகழைக் கூட்டியிருக்கிறார்.
தமிழ் பேசும் நல் உலகம் தமிழ்த் தொண்டர் ஸ்டாலின் அவர்களின் இரண்டு கண்களாகக் காண்பவை அவருடைய நூல் – பற்றும் அறிவியல் – பற்றும் தான் இந்த இரண்டின் ஒளிவீச்சும் சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகளின் குறிக்கோளைச் சரியான பார்வையில் வாசகர்களின் மனதில் நிறுத்தும் என்பதில் எனக்குப் பெருநம்பிக்கை. சிறுநூல்தான் என்றாலும் சிங்காரவேலருக்கு இது ஓர் அறிவியல் மகுடம்!
பேராசிரியர் ப.க.பொன்னுசாமி மேனாள் துணைவேந்தர்,
சென்னை மற்றும் மதுரைப் பல்கலைக்கழகங்கள்
‘அறிவியலாளர்களே பெரியோர்’ என்கிற அழுத்தமான எண்ணம் கொண்டு செயல்பட்டவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் என்பதை ‘ம.சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள்’ என்கிற இந்த நூலில் அழுத்தமாக நிறுவுகிறார் ஆசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன்.
முனைவர் கோ.பழனி பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்