Description
ஸ்ரீமன் நாராயணன் வைகுண்டத்தை விட்டு இந்த பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் வந்து கலியுக தெய்வமாக, பேசும் அரங்கனாக கோவில் கொண்டு திகழ்வதன் பின்னால் ஒரு சுவையான சரித்ரம் உள்ளது. இந்த சரித்ரத்தை இதிகாசமான ராமாயணத்திலும், புராணங்களான கருட புராணம், பத்ம புராணம் ப்ரம்மாண்ட புராணத்திலும், ஸ்ரீரங்க சேஷ்த்ர மாஹாத்ம்யமாகவும், ஸ்ரீ ரங்க ப்ரம்ம வித்யை என்னும் பெயரிலும் நமக்குக் காணக்கிடைக்கிறது.