Description
பேரா. ஜெயகிருஷ்ணனின் இந்நூல் முழுமை நோக்கிய பார்வை கொண்டதாகும். இப்பொருள் பற்றி வந்துள்ள நூல்களில் இது தனித்துவமானது என்று சொல்லலாம். கேரளம் முழுவதையும் ஆய்வுக் களமாகக் கொண்டிருக்கிறார். தமிழகத்திலும் இலங்கையிலும் கண்ணகி வழிபாட்டினை ஒப்பிட்டுக் காண்கிறார். இதன் பொருட்டு அவர் முன்னெடுக்கும் முறைமை சார்ந்த எடுத்துரைப்பு இந்நூலின் வாசிப்பைப் புதிய தடத்தில் கொண்டு செல்கிறது.
முனைவர் பக்தவத்சல பாரதி
இந்த நூலில் தமிழர்களின் மனவெளியில் நினைவுச் சின்னமாக நிலைத்துவிட்ட கண்ணகி வழிபாடு கேரளத்திலும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் எவ்வாறெல்லாம் வெவ்வேறு வடிவம் எடுத்திருக்கிறது என்பது குறித்த தகவல்களை எல்லாம் தொகுத்தளித்துள்ளார். ஆய்வின் மேல் இவர் கொண்டிருக்கும் ஆர்வமும் முயற்சியும் வியக்கத்தக்கதாக உள்ளன.
க.பஞ்சாங்கம்.