Description
தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை. பெண்கள், குழந்தைகள், தொழிலாளிகள், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பேய்கள், படுகொலைகள், சன்னியாசிகள் என்று பல அம்சங்களைக் கொண்ட அசோகமித்திரனின் சிறுகதை உலகின் சாராம்சத்தை இக்கதைகள் உணர்த்துகின்றன. சுமார் 190 சிறுகதைகள் எழுதியிருக்கும் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்குச் சிறந்ததொரு அறிமுகம் இந்தத் தொகுப்பு.