Description
உலக இலக்கியச் சூழலில் ரஷ்யக் கதைகளுக்கு எப்போதுமே ஒரு மதிப்பு உண்டு. அற்புதமான நாவல்களையும் சிறுகதைகளையும் ரஷ்ய இலக்கியம் உலகுக்கு அளித்திருக்கிறது. தமிழ்ச் சூழலில் அதிகம் பேசப்படாத ரஷ்ய எழுத்தாளர் நிகோலாய் கோகல். இவரது சிறுகதைகள், ரஷ்யச் சிறுகதைகளின் அடித்தளமாகக் கருதப்படுபவை. தனித்துவமானவை. ரஷ்ய யதார்த்தவாதத்தின் தொடக்கமாக அறியப்படுபவை.
ரஷ்யக் கிராமங்களில் நிகழும் சடங்குகள், திருவிழாக்கள், அந்த மக்களின் பாரம்பரிய வழக்கங்கள், கடவுள் மற்றும் சாத்தான் குறித்த நம்பிக்கைகள் ஆகியவற்றை மாயப்புனைவுடன் இணைத்துக் கதைகளாக்கி இருக்கிறார் கோகல். நேர்த்தியான மொழிபெயர்ப்பும் ரசனையான மொழியும் விறுவிறுப்பான நடையும் வித்தியாசமான கதைக்களமும் இந்தக் கதைகளைத் தேர்ந்த வாசிப்பனுபவமாக மாற்றுகின்றன.