தமிழ்நாட்டு விளையாட்டுகள்


Author: தேவநேயப் பாவாணர்

Pages: 158

Year: 2024

Price:
Sale priceRs. 150.00

Description

விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு. (விளை = விருப்பம், ஆட்டு = ஆட்டம்) அது சிறுவர் பெரியோர் ஆகிய இரு சாரார்க்கும் பொதுவேனும், முன்னவர்க்கே சிறப்பாக உரியதாம். மக்கள் நிலைத்த குடும்பவாழ்க்கை வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, விளையாட்டு வினை உலகில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. வேலை செய்யாத பருவத்தில் அல்லது ஓய்வு நேரத்தில், சிறுவர் பெரியோரின் செயலை அல்லது இயற்கை நிகழ்ச்சியை நடித்து மகிழ்ந்த திறமே விளையாட்டுத் தோற்றமாகத் தெரிதலின், அது முதன்முதல் சிறுவரிடையே தோன்றிற்றெனக் கொள்ளுதல் தவறாகாது. விளையாட்டு நிலைக்களன், வாழ்க்கைத் தொழில், போர், அருஞ்செயல், சிறப்பு நிகழ்ச்சி முதலியவாகப் பலதிறப்படும். உழவர் செய்யும் பயிர்த்தொழிலைச் சிறுவர் நடித்தாடும் ஆட்டு பண்ணையென்றும்; ஓர் இளங்கன்னிக்குக் களிறு, புலி முதலிய விலங்குகளாலும் ஆழ்நீராலும் நேரவிருந்த கேட்டை, தற்செயலாக அவ்வழி வந்த காளைப் பருவத்தானொருவன் நீக்கிய செய்தியைச் சிறார் நடித்தாடுவது கெடவரல் என்றும் பெயர் பெற்றதாக ஊகிக்க இடமுண்டு. விளையாட்டால் ஒருவர்க்கு உடலுரம், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, `கரும்பு தின்னக் கைக்கூலிபோல்' விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில்வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.

You may also like

Recently viewed