என் பாதங்களில் படரும் கடல்


Author: தமயந்தி

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 90.00

Description

மழைக்காலத்தில் கையில் தேநீர்க் கோப்பை ஜன்னல் ஓர ரசனையின் இதம் தமயந்தியின் என் பாதங்களில் படரும் கடல். கனவில் தொடங்கும் கவிதைத் தளம் தனி கற்பனை உலகின் திறவுகோல். இந்த புத்தகத்தின் பயணம் ஓவ்வொருவரின் இதமான தொலைந்த ஞாபகங்களை விசாரித்துவிட்டு ஒரு தோளும் கொடுக்கும் அனுபவம். உணர்வுகளை பிம்பமாக்க கவிதைகளால் மட்டுமே முடியும். அதை சில வரிகளைக் கொண்டே சிறப்பாக நம்மை வந்து அடைந்து இருக்கிறது இந்த தொகுப்பு. நிறைவதையும் கரைவதையும் உணர்வுபூர்வமாகக் கடத்தியிருக்கிறார். இவரின் பேனா முனை அனுபவச் சிதறல்களைத் திகட்ட திகட்ட உதிர்த்து இருக்கிறது கவிதைகளாக. வாழ்க்கையே எதார்த்தம்தானே? அதே பணியில் கவிதை கிடைக்கும் பொழுது அது அதன் தன்மையை மென்மையாக நம்மிடம் விசாரிக்கும்தானே. மனிதர்களின் நினைவுகளைத் தொட்டுப் பார்க்க ஒரு தனி பிராயச்சித்தம் தேவைப்படுகிறது. நினைவுகள் தனிப்பட்டவை, மனித வரையறைக்குள் அது ஒரு தனி சடங்கு. தனக்கென்று ஒரு தனி விதியை விதித்துக்கொள்ளும். ஒவ்வொரு மனிதருக்கும் விதவிதமான வர்ணஜாலத்தைக் காட்டுகிறது நினைவு. நினைவுகளின் வழியை அறிவித்து அதற்கு இறுதியில் முகவரியும் கொடுத்து இருக்கிறார் கவிஞர். படர்ந்த அந்தக் கடலின் ஒரு முனையில் நனைந்து இருக்கும் வாசகர்களின் ஈரம், அது ஏற்படுத்திய நினைவலைகள் ஒரு சுகானுபவம். - சரயுராகவன்

You may also like

Recently viewed