இரா.முருகன் கதைகள்


Author: இரா. முருகன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 940.00

Description

‘மாடியிலே கடை போடலாமா?’ ரங்கம்மா அப்படிச் சொன்ன அடுத்த விநாடி மாடியில் ஏதோ தடதடவென்று தரையில் உருளும் சத்தம். ரங்கம்மா கலவரப்பட்டுப் போனாள். ‘என்ன சத்தங்க அது?' ‘ஒண்ணுமில்லே... நீ சொன்னது பெரியாத்தாவுக்குப் பிடிக்கலே.' சென்னகேசவன் சாதாரணமாகச் சொன்னபடி மாடியைப் பார்த்தான். ‘அது ஏதோ சின்னப்புள்ளே தெரியாமச் சொல்லிடுத்து. நீ எதுக்குக் கெடந்து குதிக்கறே. பேசாம இரேன்.' உரக்கச் சொல்லிவிட்டுத் தலையைத் திருப்பி ரங்கம்மாவைப் பார்த்துச் சிரித்தான் அவன். ‘மாடியிலே யாருங்க?' ரங்கம்மா உடம்பு முழுக்கப் பயம் கவிந்துவர, சென்னகேசவனை இறுகப் பிடித்துக்கொண்டாள். ‘ஒண்ணுமில்லே, சொல்றேன். நீ உட்காரு.' அவளைத் தரையில் உட்கார வைத்துவிட்டு வாசலுக்குப் போய் எலுமிச்சம்பழ மிட்டாய் எடுத்து வந்து கொடுத்தான். அவள் தலையை வருடிக்கொண்டே சொன்னான்: ‘பெரியாத்தா ரொம்ப வருசமா இங்ககேயேதான் இருக்கு. எங்க முப்பாட்டன் சம்சாரம். தாத்தாவோட அப்பாவுக்கு அம்மா.' ‘இத்தினி நாளு எப்படி உசிரோட இருக்காங்க?' ரங்கம்மா புரியாமல் பார்த்தாள். - நூலிலிருந்து…

You may also like

Recently viewed