Description
சதாம் ஹுசைன் மரணமடைந்து பல வருடங்களானாலும், அவரது சாதனைகளும் தோல்விகளும் மரணமும் இன்றும் பேசுபொருள்களாக இருந்து வருகின்றன.
* சதாம் யார்? நாயகனா? கொடுங்கோலனா?
* ஈராக்கின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் சதாமின் பங்கு என்ன?
* சதாமின் மரணத்திற்குக் காரணம் அவருடைய சொந்தத் தவறுகளா? அல்லது மேற்கத்திய சதியா?
* வரலாற்றில் சதாமைப் புரிந்துகொள்வது எப்படி?
இன்றுவரை நீடிக்கும் இவை போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதில்களைத் தேடுகிறது.
சதாம் ஹுசைன் என்ற ஆளுமை உருவானது முதல் அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது வரை நடந்த வரலாற்று நிகழ்வுகளையும் அதன் பின்னணிகளையும் எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடி இந்தப் புத்தகம் ஆதாரங்களுடன் விவரிக்கிறது.