தென்னிந்தியத் திருமணச் சடங்குகள்


Author: எட்கர் தர்ஸ்டன் தமிழில் வானதி

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 160.00

Description

‘தென்னிந்திய இனவரைவியல் குறிப்புகள்’ (Ethnographic Notes in Southern India) எனும் பெரும் திரட்டு 1904ம் ஆண்டு எட்கர் தர்ஸ்டன் எனும் பிரிட்டிஷ்காரரால் எழுதி வெளியிடப்பட்டது. இன்றைய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒரிசா போன்ற பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடையே நிலவிய பலவிதமான திருமணச் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அடிமை முறைகள் போன்றவற்றை ஆராய்ந்து இதில் எழுதியுள்ளார். அந்தப் பெரிய திரட்டில் இருந்து, ‘தென்னிந்திய திருமணச் சடங்குகள்’ என்னும் ஒரு சிறிய பகுதியை மொழிபெயர்த்திருக்கிறார் வானதி. அன்றைய சமூகத்தில் நிலவிய சாதி முறைகள், பெண்களின் நிலை, குறிப்பிட்ட சாதியினரின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், மருமக்கள் தாய முறை, முன்னோர் வழிபாடு, ரத்த உறவுகளின் ஆதிக்கம் என அனைத்தையும் பற்றிய குறிப்புகளைத் திருமணச் சடங்குகளின் வழியே நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது இப்புத்தகம். இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. நமது பண்பாட்டின் வேர்களையும், நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியையும் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரத் தளத்தை நாம் மதிப்பிட உதவும் ஒரு முயற்சியே இந்நூல். பழங்குடிச் சமூகத்தினரின் அன்றைய நிலையைப் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிய அளவில் துணை புரியும்.

You may also like

Recently viewed