Description
தேவதாசி நடைமுறை ஒரு கட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அடிமைத்தனத்துக்கும் கொடுமைக்கும் வழிவகுத்தபோது, தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் எளிதாக நிறைவேற்றப்படவில்லை. நாடு முழுக்க மட்டுமின்றி சட்டமன்றத்திலும் நெடும் விவாதத்துக்குப் பின்னர்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அப்போது நடந்த விவாதங்களை இந்தப் புத்தகம் காட்சிப்படுத்துகிறது.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவர பாடுபட்டவர்களில் முதன்மையானவர், முதல் சட்டமன்றப் பெண் உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இன்றைய அரசியல் கட்சிகள் நிகழ்கால ஆதாயத்துக்காக உண்மையை மறைத்து, வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் ஈடுபடுகின்றன. அதை உடைக்கிறது இந்தப் புத்தகம்.
* தேவதாசி ஒழிப்புச் சட்டத்தில் ஈவெராவின் பங்கு என்ன?
* சத்தியமூர்த்தி சட்டசபையில் உண்மையில் என்னதான் பேசினார்?
* தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவர முத்துலட்சுமி ரெட்டிக்கு உதவியவர்கள் யார்?
இவை போன்ற கேள்விக்கு ஆதாரபூர்வமாகப் பதில் சொல்கிறார் ம.வெங்கடேசன். சட்டசபை விவாதங்களை அப்படியே கண்முன் நிறுத்துவது இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம்.