Description
நாட்டார் வழக்காற்றியலின் ஏடேறாப் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து ஆவணப்படுத்தும் முக்கியமான ஆய்வாளர் அ.கா.பெருமாள். இதுவரை 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருதை, 'தென்னிந்தியத் தோல்பாவைக் கூத்து' (2003), 'தென்குமரியின் கதை' (2004) ஆகிய நூல்களுக்காகப் பெற்றிருக்கிறார்.
'நாட்டார் நிகழ்த்துக் கலைக்களஞ்சியம்' (2001), 'தெய்வங்கள் முளைக்கும் நிலம்' (2003), 'ஆதிகேசவப் பெருமாள்' (2006), 'தாணுமாலயன் ஆலயம்' (2008), 'இராமன் எத்தனை இராமனடி' (2010), 'வயல்காட்டு இசக்கி' (2013), 'முதலியார் ஓலைகள்' (2016), ‘சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்' (2018), 'தமிழறிஞர்கள்' (2018), 'தமிழர் பண்பாடு (2018), 'பூதமடம் நம்பூதிரி' (2019), 'அடிமை ஆவணங்கள் (2021), தமிழ்ச் சான்றோர்கள் (2022) போன்றவை இவரது முக்கியமான நூல்கள்.